கிராம மக்கள்
மஞ்சுவிரட்டால் மனிதர்கள் உயிர் இழக்கின்றனர் என்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது சிராவயல் கிராமத்தை சேர்ந்த மக்கள், “மஞ்சுவிரட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எனவே அதற்கு தடை விதிக்கக்கூடாது, தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.
அனால் ஆங்கிலேயர்கள் அனுமதித்தர மறுத்துவிட்டனர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து முறையிட்டதை தொடர்ந்து ஒரு நிபந்தனை விதித்து அனுமதி அளித்தனர். அதாவது “கொம்பு இன்றி மஞ்சுவிரட்டு நடத்த வேண்டும்” என்றனர் . இதற்கு கிராம மக்களும் ஒப்புக்கொண்டனர். பின்னர் மஞ்சுவிரட்டு நடந்த நாளில்,கொம்புகள் தீட்டப்பட்ட காளைகளுடன் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.இதனை பார்த்த ஆங்கிலேயர், “கொம்பு இல்லாத காளைகளை வைத்து மஞ்சுவிரட்டு நடத்தச்சொன்னால், அனைத்து மாடுகளுக்கும் கொம்புகள் உள்ளதே? ” என்று கேட்டனர் .
அதற்கு கிராம மக்கள்,நீங்கள் மாட்டுகொம்பு என்று குறிப்பிட வில்லை கொம்பு இல்லாத மாடுகள் உண்டா , “கொம்பு” என்பது தாரை, தப்பட்டை, போன்ற வாத்தியகருவி நீங்கள் கேட்டுக்கொண்டதால் கொம்பு வாத்தியம் இல்லாமல் தற்போது மஞ்சுவிரட்டை நடத்துகிறோம்” என்று சாமர்த்தியமாக பதில் கூறினர். இதைக் கேட்ட ஆங்கிலேயர்களே திகைத்து நின்றதாக வரலாறும் உண்டு.
வாழ்க வளமுடன் !
இந்த வருடம்